ஆண்கள் அழகுப் போட்டிக்குப் பெண் நடுவர்கள்

280
Advertisement

ஆண்களுக்கான அழகுப் போட்டியில் பெண்கள் நடுவர்களாக செயல்படும் விநோத வழக்கம் அனைவரையும் கவர்ந்து வருகிறது.

மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நைஜர் நாட்டில்தான் இந்த விநோத வழக்கம் உள்ளது.

அந்த நாட்டில் உள்ள பழமையான திருவிழாக்களில் கெரேவோல் எனப்படும் ஆண்களுக்கான அழகுப்போட்டியும் ஒன்று.

சஹாரா பாலைவனத்துக்கு வளத்தைக் கொண்டுவரும் மழையை வரவேற்றும், மழைக்காலம் குறைவதைக் குறிக்கும் வகையிலும் பல்லாண்டுக் காலமாக இந்தப் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்த விழாவின் சிறப்பே பெண்கள் நடுவராகப் பணியாற்றுதான்.

அழகுப் போட்டியில் கலந்துகொள்ளும் ஆண்கள் மேக்கப் செய்துகொள்ளுதல், ஊர்சுற்றுதல், ஆடைகளை அணிதல் ஆகியவற்றுடன் ஆண்களின் உயரம், மெலிந்த தேகம், முகச்சமச் சீர், அழகான பல் வரிசை ஆகிய அம்சங்களும் வெற்றியாளரைத் தேர்ந்தெடுக்கும்போது கவனத்தில் கொள்ளப்படுகின்றன.

மேற்கத்திய பாணியில் கண்களை அலங்கரித்தும், உதட்டுச்சாயம் பூசியும், காதில் மணிகள் அணிந்தும், சிவப்பு, வெள்ளை, மஞ்சள் நிறம் கலந்த களிமண்ணால் முகத்தை அழகுபடுத்தியும் பங்கேற்கும் இளைஞர்களே அழகான ஆண்களாகக் கருதப்படுகிறார்கள்.
மேலும், தங்களை அழகுபடுத்திக்கொள்வதோடு இந்தப் போட்டி நிறைவுபெறாது. நன்கு மேக்கப் செய்துகொண்டபிறகு, பெண் நடுவர்களைக் கவரும்விதமாக மணிக்கணக்கில் நடனமாட வேண்டும்.

அப்படி ஆடிப் பெண் நடுவர்களைக் கவர்ந்துவிட்டால், அந்த அழகான ஆண்கள், பெண் நடுவர்களின் காதலர் அல்லது கணவராகக் கருதப்படுவார்களாம்…

உஷாரய்யா உஷாரு….அழகான ஆண்கள் உஷாரு….