20 டிகிரி குளிரில் விடப்பட்ட பெண் பச்சிளங்குழந்தை

373
Advertisement

20 டிகிரி உறைபனியில் விடப்பட்ட பெண் பச்சிளங் குழந்தையின் புகைப்படம் ஆன்லைனில் வைரலாகி வருகிறது.

சைபீரிய நாட்டில்தான் இந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பிறந்து 3 நாட்களே ஆன அந்தப் பச்சிளங்குழந்தை நோவோபிர்ஸ்க் நகருக்கு சற்றுத் தொலைவில் உள்ள சோஸ்னோவ்கா என்னும் கிராமத்தில் உறைபனியில் ஓர் அட்டைப் பெட்டி கிடந்துள்ளது. அந்தப் பெட்டியின் அசைவைப் பார்த்த 5 இளைஞர்கள் அருகில்சென்று பார்த்தபோது அதனுள்ளே பச்சிளங் குழந்தை இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

உடனடியாக அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அந்தப் பச்சிளங் குழந்தையை எடுத்துச்சென்றுள்ளனர். டாக்டர்கள் அந்தப் பச்சிளங் குழந்தையைப் பரிசோதித்தபோது சிசுவின் உடல்நிலை நன்றாக இருப்பதை அறிந்து ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்தனர்.

அந்தக் குழந்தை வீட்டில் பிறந்ததாகவும், தொப்புள் கொடி துண்டிக்கப்படாமல் இருந்ததாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். தற்போது மருத்துவமனையின் கண்காணிப்பில் உள்ள அந்தப் பச்சிளங் குழந்தை நன்றாக சாப்பிடுவதாகவும், உறங்குவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேசமயம், சிசுவைக் கைவிட்டுச்சென்ற அந்தப் பெற்றோரை, மைனர் ஒருவரைக் கொலைசெய்ய முயன்றதாக வழக்குப் பதிவுசெய்து காவல்துறையினர் தேடிவருகின்றனர்.

இதற்கிடையே, அந்த சிசுவைத் தத்தெடுக்க விரும்புவதாக ஒரு தம்பதி தெரிவித்துள்ளனது. எனினும், குழந்தையின் பெற்றோரோ உறவினரோ வருவார்களா என்பதைப் பொறுத்தே முடிவெடுக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

எதற்காக அந்தப் பச்சிளங் குழந்தையை உறைபனியில் விட்டுச்சென்ற அந்த ஈவிரக்கமற்ற பெற்றோர் என்பது தெரியவில்லை. அந்தக் கல்நெஞ்சப் பெற்றோரின் செயலைக் கண்டு உலகமே அதிர்ச்சியடைந்துள்ளது.