அர்னாலடைப்போல பல்டியடித்த ஆடு

497
Advertisement

அர்னாலடைப்போல பல்டியடித்த ஆடு பற்றிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

பிரபல ஆணழகன், ஹாலிவுட் நடிகர், கலிபோர்னியா மாகாண முன்னாள் கவர்னர் அர்னாலைப்போல ஆடு ஒன்று பல்டியடிக்கும் வீடியோ ட்டுவிட்டரில் பதிவிடப்பட்டுள்ளது.

அறுவடை செய்யப்பட்ட விளைநிலத்தில் வேலியிடப்பட்ட பகுதி அருகே காலி டப் ஒன்று கிடக்கிறது. அந்த விளைநிலத்தில் நிற்கும் ஆடு அதனைக் கவனிக்கிறது. அதனோடு சண்டைபோட எண்ணம் வந்துவிட்ட அந்த ஆடு ஓடிச்சென்று டப்பைத் தாக்குகிறது.
தாக்கிய வேகத்தில் தவறுதலாக தலைகீழாக விழுந்து பல்டியடித்துவிட்டது.

ஆட்டின் இந்த அறியாமைச் செயல் பார்ப்பதற்கு வேடிக்கையாக அமைந்துள்ளது.