Tuesday, December 3, 2024

அப்பாக்களை பிரிந்துவாழும் மகள்களுக்கு சமர்ப்பணம் ! 

“என் தந்தையின் அன்பை போல் இணை நிகர் ஏதுமில்லை இவ்வுலகிலே..” இதை அதிகமாய் உணர்ந்த தருணங்கள் பல..அதில் ஓன்று.. !

நான்கு  ஆண்டுகளுக்கு முன்பு இறந்த தந்தையிடமிருந்து ஒவ்வொரு பிறந்தநாளிலும் மகள் வாழ்த்துக் கடிதம் பெற்ற நெஞ்சம் நெகிழவைத்த நிகழ்வை அப்பாக்களை பிரிந்துவாழும் மகள்களுக்கு சமர்ப்பிக்கிறோம்.

மைக்கேல் ஒரு குழந்தைக்கு தந்தை.காலங்கள் கடந்துசெல்ல அவர்  மகளின்  17 வது பிறந்தநாளுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு,புற்றுநோயால் காலமானார்.சிறுவயதில் தந்தையை இழந்து தவித்துவந்தார் அவரின் மகள்  பெய்லி.

ஆனால் அவர் இறப்பதற்கு முன், மைக்கேல் ஒவ்வொரு ஆண்டும் தனது மகளின் பிறந்தநாளில், அவர் மறைந்த பிறகும் அவளுடன் இருபதை உணர்த்தும்விதம் மகளின் 21வது பிறந்தநாள் வரை ஒவ்வொரு ஆண்டும் ஒரு பூச்செண்டு மற்றும் பிறந்தநாள் வாழ்த்து அட்டையைப் பெற ஏற்பாடு செய்தார்.

கடந்த 2017 ஆண்டு , பெய்லி 21 வயதை அடைந்தார்.அன்று இறுதியாக அவர் தந்தையை நினைவூட்டும் வகையில் அவர் ஏற்பாடு செய்துருந்த ஒரு உணர்ச்சிபூர்வமான  கடிதத்துடன் கடைசியாக ஒரு பூங்கொத்து ஒன்றைப் பெற்றார்.இந்த அனுபவத்தை   பெய்லி தன் இணையதள பக்கத்தில் உணர்ச்சிப்பூர்வமாக பகிர்ந்துள்ளார்.

Latest news
Related news

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!