கொழுக்கும் எலிகள், தேயும் மனிதர்கள்
ஷாக் நியூஸ் SURPRISE தகவல்

407
Advertisement

மணிலாக் கொட்டை, மல்லாக் கொட்டை, நிலக்கடலை
என்று பல பெயர்களால் அழைக்கப்படும் வேர்க்கடலை
பாதாம், பிஸ்தா, முந்திரிப் பருப்பு ஆகியவற்றைவிட
சத்துகள் நிறைந்தது.

நிலக்கடலை நீரிழிவுக் குறைபாட்டின் எதிரி என்பது
பலரும் அறியாத தகவல்.

இதற்கு நாம் விவசாயப் பகுதியைக் கவனிக்க வேண்டும்.

நிலக்கடலை பயிரிடப்பட்டிருக்கும் வயலில் எலிகள்
அதிகமாக இருப்பதைக் காணலாம். வேர்க்கடலைச் செடியில்
பருப்பு உருவாகும்வரை எலிகள் அவ்வளவாக இருக்காது.
ஆனால், செடியில் காய் பிடிக்கும் பருவத்துக்கு வந்த பிறது,
எலிகள் அளவு கடந்த குட்டிகள் போட்டிருப்பதைக் காணலாம்.

நிலக்கடலைச் செடியை சாப்பிடும் ஆடு, மாடு போன்றவை
வயலுக்கு வெளியே உள்ள பறவைகள் ஆகியவை ஒரே
நேரத்தில் குட்டி போடுவதே இதற்கு நல்ல உதாரணம்.

நிலக்கடலையில் போலிக் அசிட் அதிகம் இருப்பதால்
இனப்பெருக்கம் விரைவாக நடக்கிறது- எனவே, நிலக்கடலையைத்
தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்ப்பப்பை சீராக செயல்படுவதுடன்
கர்ப்பப்பைக் கட்டிகள், நீர்க்கட்டிகள் ஏற்படாதது மட்டுமல்ல,
குழந்தைப்பேறும் உடனே உண்டாகும்.

சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில்தான் நிலக்கடலை
விளைச்சல் அதிகமாக உள்ளது. இவ்விரு நாடுகளிலும் ஜனத்தொகை
அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கர்களின் உணவில்
15 மடங்கு நிலக்கடலையின் பங்கு அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது. இது கார்போஹைட்ரேட்
மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கியப் பங்காற்றுகிறது. நாம் உண்ணும்
உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்கு கிடைக்கவும் பயன்படுகிறது.

பெண்கள் தொடர்ந்து நிலக்கடலையை சாப்பிட்டு வந்தால்
எலும்புத்துளை என்னும் நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.

தினமும் 30 கிராம் அளவுக்கு நிலக்கடலை சாப்பிட்டுவந்தால்
பித்தப்பைக் கல் உருவாவதைத் தடுக்கமுடியும்.

20 வருடம் தொடர்ந்து நடைபெற்ற ஆய்வில் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது.

நிலக்கடலை சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் என்னும்
நம்பிக்கை உள்ளது. உண்மை அதுவல்ல. உடல் எடை அதிகரிக்க
விரும்பாதவர்கள் தாராளமாக நிலக்கடலையை சாப்பிடலாம்.

நிலக்கடலையில் ரெஸ்வரெட்லால் என்னும் சத்து நிறைந்துள்ளது.
இது இதய வால்வுகளைப் பாதுகாக்கிறது- இதய நோய்கள் வருவதையும்
தடுக்கிறது. இதுவே மிகச்சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆகத் திகழ்கிறது.

இளமையைப் பராமரிக்கப் பெரிதும் உதவுகிறது நிலக்கடலை.
நிலக்கடலையில் பாலிபீனால்ஸ் என்னும் ஆன்டி ஆக்ஸிடென்ட்
இருக்கிறது. இது நமக்கு நோய் வருவதைத் தடுப்பதுடன் இளமையைத்
தக்கவைத்துக்கொள்ளவும் பயன்படுகிறது.

நிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு நல்ல டானிக் போன்றது.
மூளை வளர்ச்சிக்குப் பயன்படும் வைட்டமின் 3 நியாசின்
நிலக்கடலையில் அபரிமிதமாக உள்ளது. எனவே, நிலக்கடலை
உண்பதால் ஞாபக சக்தி அதிகரிக்கும். ரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கும்.

நிலக்கடலையில் பரிப்டோபான் என்னும் முக்கிய அமினோ
அமிலம் நிறைந்துள்ளது. இது செரட் டோனின் என்னும் மூளையை
உற்சாகப்படுத்தும். மூளை நரம்புகளைத் தூண்டுகிறது.
மன அழுத்தத்தையும் போக்குகிறது.

நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாகச் சத்து நமது
உடலில் உள்ள கெட்ட கொழுப்பை நீக்குகிறது. நிலக்கடலையில்
உள்ள ஓமேகா 3 சத்தானது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.