கொழுப்பை குறைக்கும் கொள்ளு! கூடவே கிடைக்கும் 8 பிரமாதமான பயன்கள்

327
Advertisement

‘கொழுத்தவனுக்கு கொள்ளு, இளைத்தவனுக்கு எள்ளு’ என்ற பழமொழிக்கு ஆழமான அர்த்தம் உள்ளது. குதிரையின் பிரதான உணவாக பிரபலமாக அறியப்படும் கொள்ளுக்கு கொழுப்பை கரைக்கும் சக்தி உள்ளது.

முதல் நாள் இரவு, ஒரு கைப்பிடி அளவு கொள்ளை ஊறவைத்து, மறுநாள் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் விரைவாக உடல் எடை குறையும் என எதிர்பார்க்கலாம். உடலில் பழுதடைந்த திசுக்களை சரி செய்ய கொள்ளில் இருக்கும் புரதம் உதவுகிறது.

கொள்ளுடன் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து ரசமாக குடித்து வந்தால் சளி, காய்ச்சல் மற்றும் சுவாச பிரச்சினைகள் சீராகும். நரம்புகளுக்கும் எலும்புகளுக்கும் வலு சேர்க்கும் கொள்ளு  சாப்பிடுவதால் பசியின்மை நீங்குவதோடு நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது.

கொள்ளை அவ்வப்போது உட்கொண்டு வந்தால், சிறிய அளவிலான Calcium Oxalate வகை சிறுநீரக கற்கள் கரைவதாக அண்மை ஆராய்ச்சி ஒன்றில் தெரியவந்துள்ளது. கால்சியம், பாஸ்பரஸ், இரும்புசத்து மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ள கொள்ளு ஆண்களின் விந்தணுக்களை அதிகரித்து மலட்டுதன்மையை போக்குகிறது.

Antihyperglycemic வகையை சேர்ந்த உணவாக இருக்கும் கொள்ளு, சக்கரை நோயாளிகளுக்கும் சிறந்த உணவாக கருதப்படுகிறது.

இத்தனை நன்மைகளை கொண்டுள்ள கொள்ளு, உடல் சூட்டை வெகுவாக அதிகரிக்கும் என்பதால் தினசரி பயன்படுத்துவதை தவிர்த்து வாரம் இரு முறை என உபயோகிப்பது சிறந்த பலன்களை தரும் என உணவியல் நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.