திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு அறிவித்த சலுகைகள் எதுவுமே தங்களுக்கு கிடைக்கவில்லை என மக்காச்சோள விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 60 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோள சாகுபடி நடைபெறுகிறது. மக்காச்சோள பயிருக்கு கடனும் இல்லை, பயிர் காப்பீடும் இல்லை என்று புலம்பும் விவசாயிகள், மக்காச்சோளத்திற்கு உரிய விலை கிடைப்பதில்லை என தெரிவித்துள்ளனர்.
சேலத்தை சேர்ந்த தொழிற்சாலைகளுக்கு இடைத்தரகர்கள் அடிமாட்டு விலைக்கு மக்காச்சோளத்தை கேட்பதாக விவசாயிகள் கூறுகின்றனர். எனவே, தீவன தொழிற்சாலை அமைத்து, அரசாங்கமே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.