Wednesday, May 14, 2025

‘மீண்டும்’ கேப்டனாகும் கோலி இன்ப ‘அதிர்ச்சியில்’ ரசிகர்கள்

இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றத்தால் நிறுத்தி வைக்கப்பட்ட, IPL போட்டிகள் மீண்டும் மே 17ம் தேதி தொடங்குகின்றன. முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது.

சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் வென்றால், RCBயின் Play Off கனவு நனவாகி விடும். எனவே இது மிகவும் முக்கியம் வாய்ந்த போட்டியாக பார்க்கப்படுகிறது. இந்தநிலையில் பெங்களூரு அணியில் மீண்டும் ஒரு கேப்டன் மாற்றம் இருக்கலாம் என்று தெரிகிறது.

விரலில் ஏற்பட்ட காயத்தால் அந்த அணியின் கேப்டன் ரஜத் படிதார் அவதிப்பட்டு வருகிறார். இதனால் அவரால் கொல்கத்தாவிற்கு எதிரான போட்டியில், பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அனுபவமும், திறமையும் வாய்ந்த விராட் கோலிக்கு மீண்டும் கேப்டன் பதவியை கொடுக்கலாம் என, அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாம்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விராட் ஓய்வை அறிவித்துள்ள நிலையில், அவருக்கு இந்த கேப்டன் பதவியை வழங்குவது நல்ல முடிவாக பார்க்கப்படுகிறது. ரஜத்தின் காயம் ஆறுவதற்கு சுமார் ஒருமாத காலம் ஆகும் என்பதால், அதுவரை விராட்டே அணியை கேப்டனாக வழிநடத்துவார் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

Latest news