Friday, June 6, 2025

‘தக் லைஃப்’ படத்திற்காக பெங்களூரிலிருந்து ஓசூருக்கு படையெடுக்கும் ரசிகர்கள்

மணிரத்தினம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள ‘தக் லைஃப்’ திரைப்படம் நாளை (05-06-2025) வெளியாகிறது. இப்படத்தில் சிலம்பரசன், அபிராமி, த்ரிஷா, அசோக் செல்வன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசை அமைத்துள்ளார். படத்தில் கமலுடன் சிம்புவும் இணைந்து நடித்திருப்பதால் இந்த படத்தை பார்க்க பலர் ஆர்வத்துடன் காத்துக்கொண்டுள்ளனர். 

கன்னட மொழி சர்ச்சை காரணமாக கர்நாடகாவில் ‘தக் லைஃப்’ திரைப்படத்தை வெளியிட அனுமதிக்கவில்லை. தற்போது கர்நாடகா தியேட்டர்களில் இந்த திரைப்படம் வெளியாகாத நிலையில் அவர்கள் எல்லையில் உள்ள தமிழ்நாட்டின் ஓசூர் தியேட்டர்களை நோக்கி படையெடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news