Thursday, August 21, 2025
HTML tutorial

சின்மயியை கொண்டாடும் ரசிகர்கள் – கடுப்பான ராதா ரவி! தமிழில் பாட தடை ஏன்? நடந்தது என்ன?

ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் தக் லைஃப் திரைப்படம் ஜூன் 5ம் தேதி வெளிவரவுள்ளது. இந்த திரைப்படத்தை இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன், சிம்பு, த்ரிஷா, ஜோஜு ஜார்ஜ், அபிராமி, அசோக் செல்வன் என முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். குறிப்பாக முதல் முறையாக கமல் ஹாசன், சிம்பு இணைந்து நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு ஏ.ஆர் .ரஹ்மான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.

தக் லைஃப் album-மில் மொத்தம் 9 பாடல்கள், குறிப்பாக இதில் பின்னணி பாடகி தீ பாடிய பாடல் முத்த மழை. ஆனால், இசை வெளியீட்டு விழாவில் தீ வராத காரணத்தினால், அவருக்கு பதிலாக சின்மயி அந்த பாடலை பாடினார். அவர் பாடியது ரசிகர்கள் மத்தியில் காட்டுத்தீ போன்று வைரலானது.

மேலும், சின்மயி Version தனியாக வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்தனர். அதன்படி, இசை வெளியீட்டு விழாவில் சின்மயி பாடிய Version வெளிவந்தது. அது மட்டுமின்றி கடந்த மூன்று நாட்களாக டிரெண்டிங்கில் நம்பர் 1 இடத்தில் Youtubeல் உள்ளது.

இந்த நிலையில், இது குறித்து, பாடகி சின்மயி பேசியுள்ளார்.

இதில் “தக் லைஃப் இசை வெளியீட்டு விழாவில் முத்த மழை பாடலை தீதான் பாடியிருப்பார். அன்று அவர் ஊரில் இல்லை. அதனால், நான் பாடினேன். எனக்கு கிடைத்த வரவேற்பை நம்பவே முடியவில்லை. ஆச்சரியமாக இருக்கிறது. இளம் திறமையாளரான தீ இன்னும் 15 ஆண்டுகளில் 100 சின்மயி, ஷ்ரேயா கோஷல்களை விழுங்கலாம்” என கூறியுள்ளார்..

இந்த நிலையில் சின்மயி தமிழ் சினிமாவில் ஏன் இத்தனை காலம் பாடவில்லை என்றும், அவர் பாடுவதற்கு தடை விதித்தது ஏன் என்று நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்..

இதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ள, டப்பிங் கலைஞர்கள் சங்கத் தலைவரான ராதா ரவி, சின்மயி ஆண்டு சந்தா கட்டவில்லை. இதுகுறித்து கேள்வி எழுப்பிய போது, அவர் நீதிமன்றத்திற்கு சென்று விட்டார். அங்கே சென்று நான் வாழ் நாள் முழுக்க சந்தாவை கட்டிவிட்டேன் என பொய் சொன்னாராம்.ஆகையால், தான் அவருக்கு தடை விதிக்கப்பட்டது என்றார்.

இதனைத் தொடர்ந்து நீங்கள் ஒரு மூத்த நடிகர், சின்ன பெண் சின்மயி, ஏதோ தவறு செய்துவிட்டார். அவரை அழைத்து, எதற்கு தேவையே இல்லாத பிரச்சனை, சந்தா கட்டு என்று சொல்லி இருக்கலாம், அதை விட்டு விட்டு என் பேச்சை கேட்கவில்லை என்றால்,வாழவே முடியாது என்று ஒருவரின் திறமையை அடியோடு அழிப்பது எந்த வகையில் நியாயம் என்ற கேள்வி ராதா ரவிஇடம் கேட்கப்பட்டது,
அதற்கு நீங்கள் நன்றாக கேள்வி கேட்கிறீர்கள், நீங்கள் சொல்வது சரிதான்.ஆனால், இந்த கேள்விக்கு எல்லாம் பதில் சொல்லிக்கொண்டு இருக்க முடியாது. ஏன் என்றால் இது ஒரு தேவையில்லாத ‘waste topic’ இதற்கு பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்லை என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News