ரஜினி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் ‘கூலி’ திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதற்கான முன்பதிவு தமிழகத்திற்கு முன்பாகவே அமெரிக்காவில் தொடங்கிவிட்டது.
இந்நிலையில் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ரஜினி ரசிகர்கள் அங்கு இருக்கும் திரையரங்குகளில் முழுவதையும் முன்பதிவு செய்து வருகின்றனர். இதற்கு முன்பாக டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள மூன்று திரையரங்குகளை ரஜினி ரசிகர்கள் முன்பதிவு செய்திருந்தனர்.