கரூரில் திருச்சி பைபாஸில் உள்ள ஸ்ரீகாமாட்சி சேவா சங்க அறக்கட்டளை மைதானத்தில், ராஜாவின் இசை ராஜாங்கம் என்ற தலைப்பில் இசைஞானி இளையராஜா இசைக் கச்சேரி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு 5 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு டிக்கெட் கட்டாயம் என அறிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு பொது கேட்டகிரிக்கு ரூ 500 டிக்கெட் வசூலிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு வந்த ரசிகர்கள் பலரும் உட்கார இடம் இல்லை என்றும் தண்ணீர் வசதி இல்லை எனவும் குற்றம் சாட்டினர். இது மிகவும் மோசமான நிகழ்ச்சி என கூறிய ஒரு ரசிகர், தன்னிடம் இருந்த டிக்கெட்டுகளை கிழித்தெறிந்து விட்டு சென்றார்.