Wednesday, February 18, 2026

பிரபல இயக்குனர் காலமானார்!!

அண்மையில் நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக்குறைவால் மரணமடைந்தது தமிழ் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், தற்போது தமிழ்த் திரைப்பட இயக்குனர் ஆர்.டி. நாராயணமூர்த்தி {59} மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

கடந்த ஒரு வாரமாக சென்னையின் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், உடல் நலத்தில் முன்னேற்றம் காணாமல் நேற்று இரவு 8.30 மணியளவில் மரணமடைந்தார்.

2001ஆம் ஆண்டு வெளிவந்த மனதை திருடிவிட்டாய் திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த படத்தில் பிரபுதேவா, கௌசல்யா, காயத்ரி ஜெயராம், விவேக், வடிவேலு, ஸ்ரீமன் என பலர் நடித்தனர். இந்த இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். மேலும், தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சில தொலைக்காட்சி தொடர்களையும் இயக்கி இருக்கிறார்.

இந்த நிலையில், தற்போது நாராயணமூர்த்தியின் மகன் லண்டனில் பணிபுரிந்து வருவதால் அவர் சென்னை திரும்பிய பின்னர் இறுதி சடங்குகள் நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related News

Latest News