https://www.instagram.com/reel/CShEJYHJw0B/?utm_source=ig_web_copy_link
அவ்வப்போது தனது உடற்பயிற்சி வீடியோக்களை வெளியிட்டு
ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்திவரும் நடிகை ஆன்ட்ரியா
கராத்தே கற்கும் வீடியோவைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்
வெளியிட்டு அதிரடி கிளப்பியுள்ளார்.
இந்த வீடியோவை 84 ஆயிரத்துக்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர்.,
பின்னணிப் பாடகியாக இருந்து தமிழ்த் திரையுலகுக்குள்
வலம்வரத் தொடங்கி ரசிகர்களின் கனவுக்கன்னியானார்
ஆங்கிலோ இந்திய நடிகையான ஆன்ட்ரியா. கௌதம்
மேனனின் வேட்டையாடு விளையாடு படத்தில் பாடத் தொடங்கிய
ஆன்ட்ரியா பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில்
சரத்குமாருடன் ஜோடி சேர்ந்து தனது கலைச்சேவையைத்
தொடங்கி தமிழ் ரசிகர்களின் கலைத் தாகத்தைத் தணிக்கத் தொடங்கினார்.
இதுவரை 13க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ஆன்ட்ரியா
24 லட்சம்பேர் பின்தொடரும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்
இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது படத்தில் நடிக்கவா அல்லது
மீ டூ போன்ற பிரச்சினை வராமலிருக்கவா என்பது தெரியவில்லை.
அதேசமயம், ஒரு புதுப்படத்தில் நடிப்பதற்காகத்தான் ஆன்ட்ரியா
கராத்தே கற்றுவருவதாகத் திரைத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
எப்படியோ….ரசிகர்களைத் தாக்காமல் இருந்தால் சரி.