Friday, September 26, 2025

பிரபல நடிகைக்கு திருமணம்… எப்போது தெரியுமா?

சின்னத்திரை இருந்து வெள்ளித்திரைக்கு வந்து மிகவும் பிரபலமான நடிகை, தனது 28வது வயதில் திருமணத்திற்கு தயாராகிவிட்டதாக அறிவித்துள்ளார்.

இவர் தான், பிரபல ஹிந்தி நடிகை அவிகா கோர் . இவர் ‘பாலிகா வது’ என்கிற ஹிந்தி சீரியல் மூலம் பிரபலமானார். இந்த சீரியலில் ஆனந்தி எனும் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்க இடம்பிடித்தார்.

இதன்பின் ‘மார்னிங் வாக்’ திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமான இவர், இதனைத் தொடர்ந்து தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்து பல ஹிட் திரைப்படங்களை கொடுத்தார்.இந்த ஆண்டு இவர் நடிப்பில் தெலுங்கில் ஷண்முகா எனும் திரைப்படம் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், நடிகை அவிகா கோர் தனது திருமணத்தை உறுதி செய்துள்ளார். சமூக ஆர்வலர் மிலிந்த் சந்த்வானியை வருகிற 30ஆம் தேதி திருமணம் செய்துகொள்ளப் போவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை அவிகா கோர் தெரிவித்துள்ளார். திருமண தேதியை நடிகை அவிகா அறிவித்தவுடன் ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை இந்த ஜோடிக்கு தெரிவித்து வருகிறார்கள்.

கடந்த ஜூன் மாதம் அவிகா கோர் மற்றும் மிலிந்த் சந்த்வானி ஜோடிக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News