Monday, January 26, 2026

ஆட்டோகிராப் படத்தில் நடிக்க மறுத்த பிரபல நடிகர்? சேரன் கூறிய தகவல்

கடந்த 2004ம் ஆண்டு சேரனின் இயக்கி நடித்து வெளியான திரைப்படம் ஆட்டோகிராப். அப்போதே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த திரைப்படம் வரும் நவம்பர் 14ம் தேதி அதாவது 21 ஆண்டுகள் கழித்து ரீ-ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த நிலையில், சேரன், சினேகா என படக்குழுவினர் அனைவரும் அண்மையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர், படம் குறித்த தங்களது நினைவுகளை பகிர்ந்தனர். இதற்கிடையே, ஆட்டோகிராப் திரைப்படத்தின் டிரெய்லர் 2025 என்று வெளியிடப்பட்டது.

இந்த சூழலில், இந்த படத்தில் சேரன் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க வைக்க வேறு ஒருவரை அணுகினாராம். அது வேறுயாருமில்லை, நமது சியான் விக்ரமை தான் அணுகியுள்ளனர், ஆனால் அவர் நடிக்கவில்லை.

இது தொடர்பாக சேரன் ஒரு பேட்டியில், சேது படம் நடித்ததில் இருந்து நல்ல படம் பண்ணனும்னு என்கிட்ட சொல்லிட்டே இருந்தார் விக்ரம். ஆட்டோகிராப் கதையை கேட்டு ஓகே சொன்னார், அதற்குள் ஜெமினி பட வாய்ப்பு வந்துவிட்டது. அதில் நடித்துவிட்டு உங்கள் படத்தில் நடிக்கிறேன் என சொன்னார் என்று சேரன் தெரிவித்தார்.

Related News

Latest News