லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘கூலி’ திரைப்படம் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 14) உலகம் முழுவதும் வெளியானது. இப்படத்தில் சத்யராஜ், நாகார்ஜுனா, உபேந்திரா, சௌபின் சாஹிர், அமீர்கான் போன்ற நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர்.
மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளது. அதே நேரத்தில் படம் வெளியான முதல் நாளில் உலகளவில் ரூ.130 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் கூலி படத்தில் நடித்த அமீர்கான் சம்பளம் வாங்காமல் நடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கூலி படத்தில் நடித்ததற்காக அமிர் கான் ரூ.20 கோடி சம்பளம் வாங்கி இருப்பதாக சமூக வலைதளத்தில் செய்தி பரவியது.
இதை மறுத்துள்ள அமீர் கான், “கூலி படத்துக்காக நான் சம்பளம் ஏதும் வாங்கவில்லை. ரஜினி சார் மீது மிகுந்த மரியாதையும் அன்பும் வைத்திருக்கிறேன். அவருடன் நடித்ததே எனக்குப் பெரிய பரிசுதான். அதனால் பணம் பற்றி யோசிக்கக் கூட முடியவில்லை“ என்று தெரிவித்துள்ளார்.