பல்வேறு திரைப்படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்த நடிகர் ராஜேஷ் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 75.
1974ல் வெளியான அவள் ஒரு தொடர்கதை மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். கமல்ஹாசனுடன் சத்யா, மகாநதி, விருமாண்டி போன்ற படங்களில் நடித்தார். தமிழ், மலையாளம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும், தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.
150கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த இவர் மாரடைப்பு காரணமாக சென்னையில் இன்று காலமானார்.