https://www.instagram.com/reel/CWwE8BpBuCD/?utm_source=ig_web_copy_link
புதுமணத் தம்பதிக்கு ஆனந்த அதிர்ச்சியளிப்பதற்காக கேக்கை நழுவ விட்ட ஹோட்டல் ஊழியர்களின் வீடியோ ஆன்லைனில் வைரலாகியுள்ளது.
குறும்பான அந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டுள்ளது.
வைரலாகும் அந்த வீடியோவில் மணமகனும் மணமகளும் திருமண உடையணிந்துகொண்டு தங்களின் திருமண கேக் வரும்வரை காத்திருக்கின்றனர். அப்போது அங்கு ஹோட்டல் ஊழியர்கள் இரண்டுபேர் திருமண கேக் ஒன்றை சுமந்துவருகின்றனர்.
திடீர் திருப்பமாக, கேக் சிறிது சரியத் தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து கேக் சுமந்து வருபவரும் நிலைதடுமாறி கீழேவிழுகிறார். இதனால் மொத்த கேக்கும் சரிந்துவிழுகிறது. அதைக்கண்டு மணமக்கள் அதிர்ச்சியடைகின்றனர்.
அந்த அதிர்ச்சி நீங்கும்முன்பே மணமக்களுக்கு ஆனந்தம் தரும்விதமாக உண்மையான திருமண கேக் அவர்கள்முன் கொண்டுவரப்பட்டது.
அதைக்கண்ட அவர்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுவதுடன் அளவிலா ஆனந்தம் கொள்கின்றனர். பின்னர், இருவரும் கேக் வெட்டி நடனமாடி திருமணத்தைக் கொண்டாடி மகிழ்கின்றனர்.
திருமணம் என்றாலே வேடிக்கையும் விநோதங்களும் நிறைந்திருக்கும். அந்த வகையில், தங்களின் வாடிக்கையாளருக்குப் புதுமையான வேடிக்கை நிகழ்த்தித் திருமணக் கொண்டாட்டத்தை உற்சாகமாக்கியுள்ளது ஹோட்டல் நிர்வாகம்.