தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான பா.ரஞ்சித், “நீலம்” எனும் பெயரில் தயாரிப்பு நிறுவனம் மற்றும் அறக்கட்டளை ஆகியவற்றை நடத்தி வருகின்றார். இந்நிலையில், நடிப்பில் ஆர்வம் கொண்டு வாய்ப்புத் தேடும், மக்களை ஏமாற்றும் நோக்கில் நீலம் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில் போலியான ஆடிஷன் அழைப்புகள் விடுக்கப்படுவதாகவும், அதனை யாரும் நம்பவேண்டாம் எனவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து, நீலம் தயாரிப்பு நிறுவனத்தில் எக்ஸ் தளப் பக்கத்தில் கூறப்பட்டிருந்தாவது: “போலியான ஆடிஷன் எச்சரிக்கை! நீலம் ப்ரொடக்ஷன்ஸ் பெயரில் ஆடிஷன் அழைப்புகளை விடுக்கும் போஸ்டர்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன. அவை அனைத்தும் போலியானைவை என்பதை நாங்கள் உறுதிப்படுத்துகின்றோம்” எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும், நீலம் தயாரிப்பு நிறுவனத்தால் நடத்தப்படும் ஆடிஷன்களின் அழைப்புகள் அவர்களது அதிகாரப்பூர்வ எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களின் மூலமாக மட்டுமே அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.