நடிகர் ஃபஹாத் ஃபாசில் பயன்படுத்தும் பட்டன் போன் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. இந்தப் போனை ஐபோன் போன்ற ஸ்மார்ட்போன்களுடன் ஒப்பிடுகையில் அதன் விலை 10 மடங்கு அதிகமாகும் என்று கூறப்படுகிறது.
ஃபகத் ஃபாசில் ஒரு படத்திற்கு இவர் 4 கோடி ரூபாய் முதல் 8 கோடி ரூபாய் வரை சம்பளமாக பெறுகிறார். இவர் சுமார் 50 கோடி ரூபாய் சொத்து மதிப்பு கொண்ட ஒரு நபராக இருக்கிறார். இவருடைய தந்தை ஃபாசில் புகழ்பெற்ற இயக்குனர்.
தற்போது இவர் பட்டன் போன் பயன்படுத்தி வருகிறார். இந்த பட்டன் போன் ஐபோன்களை விலை 10 மடங்கு விலை கொண்டது என்பது தான் ஆச்சர்யம். பிரிட்டனை சேர்ந்த Vertu என்ற ஆடம்பர போன் நிறுவனத்தின் பட்டன் போன் தான் இது. இந்திய ரூபாயில் இந்த விலை 10 லட்சம் ரூபாய் ஆகும்.
டைட்டானியம் , நீலக்கல் படிகம், கையால் தைக்கப்பட்ட லெதர் என பல்வேறு தனித்துவங்களை கொண்டிருக்கிறது. பட்டன் போனாக இருந்தாலும் ப்ளூடூத், ஜிபிஆர்எஸ் ,எஸ்எம்எஸ் மற்றும் எம்எம்எஸ் இணைப்புகள் உள்ளன. ஸ்டீல் கீ பேட் கொண்டுள்ளது.