பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், சாலையோர வியாபாரிகளுக்கான ஆத்ம நிர்பார் நிதி திட்டத்தை மறுசீரமைத்து விரிவாக்கம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது.
கொரோனாவால் ஏராளமான நெருக்கடிகளை சந்தித்த சாலையோர வியாபாரிகளுக்கு உதவுவதற்காக கடந்த 2020ம் ஆண்டு இந்த திட்டம் தொடங்கப்பட்டது. கடந்த ஜூலை 30ம் தேதி நிலவரப்படி, 68 லட்சத்துக்கு மேற்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வரை செல்லுபடியாகி இருந்த நிலையில், இதை மறுசீரமைத்து நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதைத்தவிர 12 ஆயிரத்து 328 கோடி ரூபாய் மதிப்பிலான 4 ரயில்வே திட்டங்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.