சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், பாதுகாப்பு கருதி 13 ஆயிரம் கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையின், நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. அதன்காரணமாக அணைக்கு வரும் நீர்வரத்து 8 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
அணையின் முழு கொள்ளளவான 119 அடியில், தற்போது 117.40 அடிக்கு நீர்மட்டம் உள்ளது. அதன்காரணமாக அணையின் பாதுகாப்பை கருதி, 13 ஆயிரம் கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதனால் தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் உள்ள பொதுமக்களுக்கு, 6வது முறையாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.