உலகின் 80% பிரச்னைக்கு முதியவர்கள் தான் காரணம் என முன்னாள் அதிபர் பராக் ஒபாமா கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக ஒபாமா பேசியதாவது: உலகின் 80 சதவீத பிரச்சனைகள் வயதான மனிதர்களையே சார்ந்து உள்ளது என்று சொல்வது நியாயமானது. அவர்கள் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். எல்லாவற்றிலும் தங்கள் பெயர்களைப் பதிக்கிறார்கள்.
அரசியல் தலைவர்கள் ஒரு வேலையைச் செய்யத்தான் நீங்கள் அங்கு இருக்கிறீர்கள் என்பதைத் தாங்களே நினைவுபடுத்திக் கொள்வது முக்கியம். இவ்வாறு முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளார்.
முன்னாள் அதிபர் பராக் ஒபாமா கூறியது 77 வயதான அதிபர் டொனால்டு டிரம்பைக் குறை கூறும் விதமாக பரவலாகக் கருதப்பட்டன.