Monday, December 23, 2024

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் காலமானார்..!!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏவுமான ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 75.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏவுமான ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு நுரையீரல் சார்ந்த பிரச்சனை இருப்பதாக மருத்துவர்கள் உறுதி செய்ததை அடுத்து அவருக்கு சென்னை மியாட் மருத்துவமனையில் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

அவருடைய உடல் நிலை மீண்டும் மோசமடைந்தாக தகவல் வெளியானதை அடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

Latest news