Monday, July 14, 2025

”விக்கெட் எடுக்காட்டியும் பரவால்ல” England செய்த ‘மோசமான’ விஷயம்

5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் தற்போது விளையாடி வருகின்றன. இளம்கேப்டன் சுப்மன் கில் தலைமையில் இந்தியா, இந்த டெஸ்ட் தொடரை எதிர்கொள்வதால் தொடரின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்தநிலையில் டெஸ்ட் தொடரினை வெல்ல, இங்கிலாந்து செய்யும் அட்ராசிட்டிகள் மிகுந்த விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது. 3வது டெஸ்டில் ராகுல், ரிஷப் பார்ட்னர்ஷிப்பை பிரிக்க லெக் திசையில் 7 பீல்டர்களை நிற்க வைத்து, தொடர்ச்சியாக ஷார்ட் பால்களை வீசினர்.

விக்கெட் விழவில்லை என்றாலும் பேட்டர்களுக்கு காயம் ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் இங்கிலாந்து இந்த செயலை செய்தது. இதை சுனில் கவாஸ்கர் கண்டித்து உள்ளார். இதுகுறித்து அவர், ” இது கிரிக்கெட்டே கிடையாது. உடம்புக்கு நேராக மட்டுமே பந்துவீசுவேன் எனக் கூறி, 7 பேரை ஒரே திசையில் நிற்க வைத்துள்ளனர்.

ஒன்று அவுட் எடுக்க வேண்டும். இல்லையென்றால், பேட்டருக்கு காயத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதுபோல்தான், அவர்களது திட்டம் இருக்கிறது. இது மிகவும் ஆபத்தான விஷயம். ICC கிரிக்கெட் கமிட்டி தலைவர் சவுரவ் கங்குலி இதனை கேட்டுக் கொண்டிருந்தால், தயவு செய்து, இந்த விஷயம் குறித்து பரிசீலிக்க வேண்டும்,” இவ்வாறு கோரிக்கை வைத்துள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news