Thursday, July 31, 2025

மூன்றாம் ‘உலகப்போர்’ வந்தாலும் ‘இந்த’ நாடுகள் Safe தானாம்

ஈரான் – இஸ்ரேல் நாடுகளுக்கு இடையேயான போர், 10 நாட்களைக் கடந்தும் நீடித்துக்கொண்டே செல்கிறது. இரு நாடுகளும் ஒன்றையொன்று வலிமையாக தாக்கிக் கொள்கின்றன. இரண்டு நாடுகளுக்கு ஆதரவாக வல்லரசு நாடுகளும் களமிறங்கி இருப்பதால், இப்போதைக்கு இந்த போர் முடிய வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.

இந்தநிலையில் ஈரான் – இஸ்ரேல் மோதலால் 3வது உலகப்போர் வெடித்தால், எந்த நாடுகள் பாதுகாப்பாக இருக்கும் என்னும் தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. அதுகுறித்து இங்கே பார்க்கலாம்.

அந்தவகையில் மூன்றாவது உலகப்போர் மூண்டாலும் கூட, ஐஸ்லாந்து நாடு அதிகம் பாதிக்கப்படாது. ஏனெனில் எந்தவொரு போரிலும் பங்கேற்காத நாடாக ஐஸ்லாந்து இருக்கிறது. உலகின் அமைதியான நாடுகளில் ஒன்றாக ஐஸ்லாந்து இருப்பதும் இதற்கு முக்கிய காரணமாகும்.

ஏராளமான உணவு ஆதாரம், வளமான நிலம், நவீன உள்கட்டமைப்பு ஆகிய காரணங்களால் தென் ஆப்பிரிக்கா நாடும், 3வது உலகப்போரால் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்பில்லை. ஆஸ்திரேலியாவில் இருந்து 2700 மைல்கல் தூரத்தில் இருக்கும் பிஜி நாடும் 3ம் உலகப்போரில் பாதிக்கப்படாது.

ராணுவத்தை வைத்திருந்தாலும் உலகளாவிய அமைதி குறியீட்டில், பிஜி நாடு உயர்ந்த இடத்தைக் கொண்டிருப்பதே இதற்கு காரணமாகும். தென் அமெரிக்க நாடான சிலி ஏராளமான இயற்கை வளங்களைக் கொண்டிருக்கிறது. உள்கட்டமைப்பிலும் தனித்து நிற்பதால் 3வது உலகப்போர் மூண்டாலும் சிலிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

அணு ஆயுத போருக்கு பிறகு, பஞ்சத்தை தாங்கும் நாடுகளில் ஒன்றாக அர்ஜெண்டினா திகழ்கிறது. இயற்கை முறையில் பயிர்கள் விளைவிக்கப்படுவதால், 3வது உலகப்போர் வந்தாலும் அதனால் அர்ஜெண்டினாவிற்கு எவ்வித பிரச்சினையுமில்லை.

உலகளாவிய அமைதி குறியீட்டில் 2வது இடத்தில் இருக்கும், நியூசிலாந்து நாடும் இந்த போரால் பாதிக்கப் படாது. போர்களில் எப்போதும் நியூசிலாந்து நடுநிலைமை வகிப்பதும், அந்நாட்டின் தூரமும் இதற்கு முக்கிய காரணமாகும். கரடுமுரடாக அமைந்த மலைப்பாங்கான நிலப்பரப்பும், இயற்கையாகவே நியூசிலாந்துக்கு பாதுகாப்பு அளிக்கிறது. ரேடார் லிஸ்டில் நியூசிலாந்து இல்லை என்பதும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

ஆஸ்திரேலியா மற்றும் ஹவாய்க்கு நடுவே அமைந்துள்ள, துவாலு தீவும் இந்த போரால் பாதிக்கப்படாது. வெறும் 11 ஆயிரம் பேர் மட்டுமே இங்கு வசிக்கின்றனர். என்றாலும் இதன் பலவீனமான உள்கட்டமைப்பால், ஆக்கிரமிப்பாளர்கள் இங்கு படையெடுப்பதற்கு வாய்ப்புகள் குறைவு தான்.

அணு ஆயுத மோதலை எதிர்கொள்ளக்கூடிய சில நாடுகளில் சுவிட்சர்லாந்தும் ஒன்றாகும். இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் சுவிட்சர்லாந்து எந்தவொரு போரிலும் ஈடுபடவில்லை. அமைதி நிறைந்த சுவிட்சர்லாந்து நாடு நடுநிலைமைக்கும் பெயர் பெற்றதாகும். அதன் மலைப்பாங்கான நிலப்பரப்பு இயற்கையாகவே அந்நாட்டிற்கு பாதுகாப்பினை வழங்குகின்றது. இந்த காரணங்களால் 3வது உலகப்போர் வந்தாலும் சுவிட்சர்லாந்து அதனால் பாதிக்கப்படாது.

டென்மார்க்க்கின் ஒரு அங்கமான கிரீன்லாந்து உலகின் மிகப்பெரிய தீவுகளில் ஒன்றாகும். வெறும் 56 ஆயிரம் பேர் மட்டுமே இங்கு வசிக்கின்றனர். தொலைதூர இருப்பிடம் மற்றும் நடுநிலைமை காரணமாக எந்தவொரு வல்லரசு நாடும் இங்கு போர்தொடுக்க விரும்பாது. இதனால் 3வது உலகப்போர் வந்தாலும் கிரீன்லாந்திற்கு எந்த பிரச்சினையுமில்லை.

சிறிய நாடாக இருந்தாலும் கூட, உலகளாவிய மோதல்களில் எந்த பக்கத்திலும் நிற்க மாட்டோம் என்று இந்தோனேசியா உறுதியாகக் கூறியுள்ளது. இதன் காரணமாக 3வது உலகப்போரில் இந்த நாடு பாதிக்கப்பட வாய்ப்புகள் இல்லை.

புவியின் தெற்கு முனையில் தனிமைப்படுத்தப்பட்ட அண்டார்டிகா கண்டமும், 3வது உலகப்போரினால் பாதிக்கப்படாது.அதேநேரம் 5.4 மில்லியன் சதுரமைல் அளவிலான பரந்த நிலப்பரப்பைக் கொண்டிருப்பதால், ஆயிரக்கணக்கான மக்கள் இங்கே தஞ்சம் அடையலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News