கடந்த செப்டம்பர் 15, 2000 ஆம் ஆண்டில் இயக்குநர் வசந்தின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘ரிதம்’.
இந்த திரைப்படத்தில் அர்ஜூன், மீனா, ரமேஷ் அரவிந்த், ஜோதிகா, நாகேஷ் ஆகியோர் நடித்திருந்தனர்.
ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்த இப்படம் இசையைத்திருந்தார். இந்த பாடல்கள் இன்றைக்கும் மறக்க முடியாத மற்றும் கேட்காத நபர்களே ஏறும் இல்லை என்பதே உண்மை.
இந்த திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள 5 பாடலுக்கும் வைரமுத்து பாடல் வரிகளை எழுதியுள்ளார். இந்த நிலையில் ரிதம் படம் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தளத்தில் இது குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,”கால் நூற்றாண்டு கழிந்தபின்னும் ரிதம் படப் பாடல்கள் கொண்டாடப்படுவதைப் புன்னகையோடு பார்க்கிறேன்” என்று வைரமுத்து நெகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.
