அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கு பிறகு காரில் வெளியேறிய எடப்பாடி பழனிசாமி, தனது முகத்தை மூடிக் கொண்டு செல்வதைப் போன்ற காணொலி இணையத்தில் வைரலாக பரவியது.
இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது : உள்துறை அமைச்சர் அமித்ஷா வீட்டில் இருந்து காரில் வெளியே வரும்போது என் முகத்தை துடைத்தேன்; அதை எடுத்து அரசியல் செய்துள்ளனர். ஒரு முதலமைச்சர் என்ன பேசுவது என்று தெரியாமல் பேசுகிறார். இவ்வாறு பேசுவது அவருக்கு அழகல்ல.
முகத்தை மறைக்க வேண்டிய அவசியம் எனக்கு கிடையாது. முகத்தை துடைப்பதில் என்ன அரசியல் இருக்கிறது? கார் இல்லாததால் வேறு வேறு கார்களில் மாறி மாறி பயணித்தேன். இனிமேல் Rest Room போனால் கூட உங்களிடம் சொல்லிட்டுதான் போகணும் போல. அப்படிப்பட்ட நிலைமைக்கு இன்றைய அரசியல் சென்றுவிட்டது என கூறினார்.
