ஏப்ரல் 15ம் தேதி நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையிலான போட்டி, IPL வரலாற்றிலேயே நல்லதொரு மேட்ச் ஆக அமைந்தது. ஏனெனில் போட்டி முழுவதுமே பவுலர்கள் தான் ஆதிக்கம் செலுத்தினர்.
முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணியை, KKR பவுலர்கள் 111 ரன்களுக்கு சுருட்டி வீசினர். இதனால் கொல்கத்தா இந்த போட்டியை மிகவும் எளிதாக வென்று, நெட் ரன்ரேட்டை உயர்த்திக் கொள்ளும் என்பது தான் அனைவரின் எண்ணமாக இருந்தது.
ஆனால் அதற்குப்பிறகு நடந்தது தான் வரலாறு . ‘எங்க கிட்டயும் சீப்பு இருக்கு மோடில்’ கொல்கத்தா பேட்ஸ்மேன்களை கதறவிட்ட பஞ்சாப் பவுலர்கள், வெறும் 95 ரன்னில் மொத்த ஆட்டத்தையும் முடித்து, 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தினர்.
அட்டகாசமான இந்த வெற்றியால் தன்னுடைய Ex அணி கொல்கத்தாவை, பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் பழி தீர்த்துக் கொண்டுவிட்டார். இந்தநிலையில் போட்டியின்போது பஞ்சாப் வீரர் செய்த விஷயம், கிரிக்கெட் ரசிகர்களை கடும்கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.
கொல்கத்தாவின் Venkatesh Iyer, Angkrish Raghuvanshi இருவரும் களத்தில் நின்றபோது, பவுண்டரிக்கு அடிக்கப்பட்ட பந்தை, ஆஸ்திரேலிய வீரர் Xavier Bartlett தடுத்தார். ஆனால் பந்தினை விக்கெட் கீப்பரிடம் வீசுவதற்கு பதிலாக, தலைக்கு பின்னால் தூக்கி எறிந்து விட்டார்.
இதனால் 4 ரன்கள் KKRக்கு கூடுதலாக கிடைத்தது. இதேபோல அந்த அணியின் நட்சத்திர வீரர் ஷஷாங்க் சிங்கும் Fielding தவறால், கொல்கத்தாவிற்கு ஏகப்பட்ட பவுண்டரிகளை பரிசாக வழங்கினார். இந்த இருவரும் Fieldingகில் கோட்டை விடாமல் இருந்திருந்தால், கொல்கத்தாவை இன்னும் குறைந்த ரன்களுக்கு சுருட்டி இருக்கலாம்.
இதைப்பார்த்த ரசிகர்கள், ” ஒரு கொழந்த கூட இந்த மாதிரி கேவலமா Fielding செய்யாது. என்ன தான் ரெண்டு பேரும் Training எடுத்தீங்களோ,” என்று, இருவரையும் சமூக வலைதளங்களில் கழுவி ஊற்றி வருகின்றனர்.