ஈரோடு கிழக்கு தொகுதிக்கு அடுத்த மாதம் 5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தலில் திமுக சார்பில் வி.சி சந்திர குமார் போட்டியிடுகிறார்.
இந்த தேர்தலை அதிமுக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ள நிலையில் தற்போது நடிகர் விஜய்யின் கட்சியான தமிழக வெற்றி கழகமும் புறக்கணித்துள்ளது. வேறு எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.