ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த 5ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் தி.மு.க., நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 46 பேர் போட்டியிட்டனர். காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மொத்தம் 64.02% வாக்குகள் பதிவானது.
இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ளது. வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் 24 மணி நேரமும் காவல் துறை கண்காணிப்பு போடப்பட்டுள்ளது. மொத்தம் 14 மேசைகளில் வாக்கு எண்ணும் பணியில் 51 பேர் ஈடுபட உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.