அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி PTI செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வெளிநாட்டு பயணம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
சட்டம்-ஒழுங்கு, சமூக நீதி, விவசாயிகள் பிரச்சனையில் திமுக அரசு தோல்வி அடைந்துவிட்டது என்றும் குற்றம்சாட்டியுள்ளார். எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 210க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெல்லும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ள அவர், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் முடக்கப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-திமுக இடையேதான் நேரடி போட்டி என்றும் கூறியுள்ளார். திமுக – தவெக இடையேதான் போட்டி இருக்கும் என விஜய் பேசியது குறித்த கேள்விக்கு இபிஎஸ் இவ்வாறு பதிலளித்துள்ளார்.