Wednesday, April 23, 2025

‘EPFO’ வில் அதிரடி UPDATE ! முன்னாடி 1 மாசம்…இப்போ? just click…!!!

இனிமேல் உங்கள் பிஎஃப் பணத்தை பெற, நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டிய அவசியமே இல்லை.

2025 ஏப்ரல் மாதத்தில், EPFO ஒரு பெரிய மாற்றத்தை கொண்டுவந்துள்ளது. பணம் திரும்பப்பெறுவது இன்னும் எளிமையாகும் வகையில், ஆட்டோமெட்டிக் செட்டில்மென்ட் முறையில் ரூ.5 லட்சம் வரையிலான தொகையை பான்கார்டு மற்றும் வங்கி கணக்கு சோதனை மட்டும் வைத்து, கூடுதல் அதிகாரிகள் சோதனை இல்லாமல், மூன்று நாட்களில் உங்கள் கணக்கில் பணம் வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை இந்த ப்ராசஸ் ஒரு மாதம் வரை ஆகலாம். ஆனால் தற்போது, EPFO சார்பாக 21.6 மில்லியன் கிளைம்கள் மூன்று நாட்களில் வழங்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

தற்போது, 60% வரை EPFO கிளைம்கள் தானியங்கி முறையில் செயல்படுகிறது. அதாவது, மருத்துவம், வீடு வாங்குதல், திருமணம், கல்வி செலவுகள் என பல காரணங்களுக்கு இந்த சுலபமான ஆட்டோமாடெட் முறையில் பிஎஃப் பணம் பெறலாம்.

இதற்கு மேலாக, மத்திய அரசு தற்போது EPFO 3.0 திட்டத்தை மே அல்லது ஜூன் 2025க்குள் கொண்டு வர உள்ளதாகவும், அதன் ஒரு பகுதியாக, பிஎஃப் பணத்தை நேரடியாக ATM மூலம் எடுத்துக்கொள்ளும் வசதி அறிமுகமாகும் என்றும் அறிவித்துள்ளது.

அதற்கான சிறப்பு கார்டுகள் வழங்கப்படும். அந்த கார்டுகள், உங்கள் ஆதார் மற்றும் மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்கும். ATM-ல் போய், மற்ற எடிஎம் கார்டுகளைப் போலவே பயன்படுத்தி உங்கள் பிஎஃப் பணத்தை எடுத்துக்கொள்ளலாம்.

இது உண்மையிலேயே ஒரு பெரும் மாற்றம். பிஎஃப் பணத்தை எடுக்க பயம், குழப்பம், நேரம் வீணாகும் நிலை இனி இல்லை.

EPFO 3.0 வந்துவிட்டால், நம்ம பணத்தை நாமே எப்போதும் எளிதாக எடுக்கலாம். No waiting. No delay. Just click… and cash in hand!

இந்த மாதிரி பயன்பாடுகள் வந்தால், தொழிலாளர்களுக்கு இது ஒரு பெரிய ஆறுதல் தான்.

Latest news