ஃபேஸ்புக் பயன்படுத்திய தொழிலதிபரை கன்னத்தில் ஓங்கி அறைந்த பெண்ணின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கேட்கவே வேடிக்கையாக இருக்கிறதவல்லவா…
கன்னத்தில் அறைந்த அந்தப் பெண் யார்? அடிவாங்கிய அந்த ஆண் யார்? வாருங்கள் பார்க்கலாம்….
சான்பிரான்சிஸ்கோவைப் பதிவு அலுவலகமாகக்கொண்டு நிறுவனத்தை நடத்தி வருபவர் தொழிலதிபர் அனீஷ் சேத்தி. இந்திய வம்சாவளியினரான அவரது நிறுவனத்தின் உற்பத்தித் திறன் திடீரென்று 35 சதவிகிதமாகக் குறைந்துவிட்டது. அதற்குக் காரணம் தினமும் 6 மணி நேரத்துக்கும் அதிகமாக பேஸ்புக்கிலேயே செலவிடுவதான் என்பதை உணர்ந்தார்.
உற்பத்தித் திறனை அதிகரிக்க என்னசெய்வதென்று யோசித்தவருக்குப் புதுமையான யோசனை ஒன்று தோன்றியுள்ளது. அந்த யோசனையை நிறைவேற்ற இணையதளம் ஒன்றில் விளம்பரம் செய்துள்ளார்.
அந்த விளம்பரத்தில் அனீஷ் சேத்தி பேஸ்புக்கைப் பயன்படுத்தத் தொடங்கினால் அவரது கன்னத்தில் ஓங்கி அறைய வேண்டும் என்றும், அதற்கான ஊதியமாக ஒரு மணி நேரத்துக்கு 8 டாலர் வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
அந்த விளம்பரத்தைப் பார்த்து விண்ணப்பித்த காரா என்ற இளம்பெண் அப்பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பணியில் அமர்த்தப்பட்டார்.
அதைத் தொடர்ந்து அலுவலகத்தில் மனீஷ் சேத்தியின் அருகே இடதுபக்கமாக ஒரு நாற்காலி போடப்பட்டது. அதில் உட்கார்ந்த காரா தனது BOSS செய்யும் அலுவலகப் பணிகளைக் கண்காணிக்கத் தொடங்கினார்.
பாடிய வாயும் ஆடிய காலும் சும்மா இருக்குமா? சமூக ஊடகத்துக்கு அடிமையாகிவிட்ட அனீஷ் சேத்தியின் மூளை பேஸ்புக் அக்கவுண்டை வழக்கம்போலப் பயன்படுத்தத் தொடங்கியது.
அவ்வளவுதான்…. பளார் என்று சேத்தியின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார் காரா. காராவின் கடுமையானப் பரிசை வாங்கிக்கொண்ட சேத்தியின் மூளை மின்னலென்று பேஸ்புக் கணக்கிலிருந்து வெளியே வந்தது.
இப்படியே தொடர்ந்தது காராவின் பளார்….
காராவின் கைங்கர்யத்தால் இப்போது மனீஷ் சேத்தி நிறுவனத்தின் உற்பத்தித் திறன் 98 சதவிகிதமாக உயர்ந்துவிட்டது.
அப்புறமென்ன…? சந்தோஷம்தானே சேத்தி….
2000 KIDSகளின் உயிர்மூச்சே செல்போனும் சமூக வலைத்தளமும்தான். இந்த வழக்கம் கிட்ஸ்களைத்தாண்டி பெரியவர்களையும் தொற்றிக்கொண்டுவிட்டது. அது தொழிலதிபர்களையும் விட்டுவைக்கவில்லை.
2012 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த சம்பவம் தற்போது சமூக ஊடகத்தைக் கலக்கி வருகிறது.