ரூ.2 கோடி லஞ்சம் கேட்ட அமலாக்கத்துறை அதிகாரி கைது

ஒடிசா மாநிலத்தை சேர்ந்த தொழிலதிபர் ரதிகாந்தா ராவத் என்பவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் இருந்து ரதிகாந்தா ராவத்தை விடுவிக்க அமலாக்க இயக்குநரகத்தின் துணை இயக்குநர் சிந்தன் ரகுவன்ஷி என்பவர் ரூ.2 கோடி லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து ரதிகாந்தா ராவத், அளித்த புகாரின்பேரில் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதையடுத்து அமலாக்கத்துறை அதிகாரி சிந்தன் ரகுவன்ஷியும் கைது செய்யப்பட்டு சிறப்பு சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். சிந்தன் ரகுவன்ஷியை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவிட்டது.

Related News

Latest News