தொழிலதிபர் அனில் அம்பானிக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கடந்த 2017ஆம் ஆண்டு முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் யெஸ் வங்கியில் அனில் அம்பானிக்கு சொந்தமான நிறுவனங்களுக்கு 3 ஆயிரம் கோடி ரூபாய் கடனாக வழங்கி இருக்கிறது. இந்த கடன் தொகையை வாங்கிய நோக்கத்திற்காக பயன்படுத்தாமல் மற்ற ஷெல் நிறுவனங்களுக்கும் , நிறுவனத்தின் மற்ற அமைப்புகளுக்கும் மாற்றி விட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
யெஸ் வங்கியில் கடன் வாங்கி மோசடி செய்ததாக அனில் அம்பானி மற்றும் அவருடைய நிறுவனங்கள் மீது சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. இதன் அடிப்படையில் தான் தற்போது அமலாக்கத்துறை சோதனை நடத்தப்படுகிறது.