பிருத்விராஜ்-மோகன்லால் கூட்டணியில் உருவான எம்புரான் திரைப்படம் மார்ச் 27 அன்று வெளியானது. இந்த திரைப்படம், மிக விரைவாக 200 கோடி ரூபாய் வசூலித்த முதல் மலையாள திரைப்படம் என்ற பெருமையையும் பெற்றது.
இப்படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகளால் சர்ச்சையில் சிக்கியது. இதையடுத்து சர்ச்சைக்குரிய காட்சிகள் படத்தில் இருந்து நீக்கப்பட்டது.
இந்நிலையில், எம்புரான் படத்தை தயாரித்த தயாரிப்பு நிறுவனத்துக்கு சொந்தமான கோகுலம் சிட்பண்ட்ஸ் நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.