அமைச்சர் கே.என். நேரு மீது வழக்குப்பதிவு செய்ய அமலாக்கத்துறை மீண்டும் கடிதம்

தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சராக கே.என்.நேரு செயல்பட்டு வருகிறார். இவர் லஞ்சம் வாங்கிக்கொண்டு பணி நியமனம், டெண்டர் முறைகேடுகள், சதித்திட்டங்கள் மூலம் ரூ. 1020 கோடி வரை ஊழல் நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும், இதற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

இந்த ஊழல் தொடர்பாக தமிழக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தக்கோரி கடந்த அக்டோபர் 27ம் தேதி தமிழக டிஜிபி-க்கு அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியது. ஆனால், இதுவரை போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை.

இந்நிலையில், ஊழல் தொடர்பாக அமைச்சர் கே.என்.நேரு, அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த தமிழக காவல்துறை டிஜிபி-க்கு அமலாக்கத்துறை மீண்டும் கடிதம் எழுதியுள்ளது.

Related News

Latest News