IPL தொடரில் 3 ஆண்டுகளுக்கு முன்பு இணைந்த அணி லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ். ஆரம்பத்தில் இந்த அணிக்கு கேஎல்ராகுல் கேப்டனாக இருந்தார்.
அவரின் தலைமையில் கீழ் லக்னோ இறுதிப்போட்டிக்கு முன்னேறவில்லை. இதனால் மைதானத்தில் வைத்தே அவரை, உரிமையாளர் கோயங்கா திட்டித் தீர்த்து விட்டார். இதையடுத்து ராகுல் டெல்லி அணியில் இணைய, டெல்லி கேப்டனாக இருந்த ரிஷப் பண்டை, 27 கோடி ரூபாய்க்கு LSG ஏலத்தில் எடுத்தது.
3 போட்டிகள் முடிவில் லக்னோ 1 வெற்றி 2 தோல்வியுடன், புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் இருக்கிறது. இந்தநிலையில் லக்னோ அணி உரிமையாளர் கோயங்கா, பஞ்சாப் உடனான தோல்விக்கு பிறகு அந்நியனாகவே மாறிவிட்டார்.
ராகுலுக்கு நேர்ந்த அதே விஷயம் தற்போது பண்டுக்கும் நடந்துள்ளது. இதனால் பண்ட்-கோயங்கா இருவருக்கும் நடுவே, மறைமுக பனிப்போர் வெடித்துள்ளதாகத் தெரிகிறது. 27 கோடிக்கு எடுத்தும் கேப்டனாக ஜொலிக்கவில்லை என்பதால், வேறு ஒருவரை கேப்டனாக்கும் முடிவில் கோயங்கா இருக்கிறாராம்.
இதைப்பார்த்த ரசிகர்கள், ” உங்களுக்கு வேற டீமே கெடைக்கலயா?”, என்று ரிஷப்புக்கு ஆதரவாகவும், ”இப்படியே செஞ்சிட்டு இருந்தா கடைசியா, நீங்க மட்டும் தான் டீம்ல இருப்பீங்க” என, கோயங்காவிற்கு எதிராகவும் விமர்சனம் செய்து வருகின்றனர்.