‘எம்புரான்’ படத்தின் டிக்கெட் புக்கிங் மார்ச் 21-ம் தேதி தொடங்கப்பட்டது. கேரளாவில் ஒரு மணி நேரத்தில் டிக்கெட் புக்கிங் தொடங்கப்பட்ட அனைத்து திரையரங்குகளிலும் ஃபுல் ஆனாது. கேரளாவில் டிக்கெட் முன்பதிவில் மட்டும் முதல் நாளில் ரூ.6 கோடி இதுவரை வசூலாகி இருக்கிறது.
புக் மை ஷோ தளத்தில் ஒரு மணி நேரத்தில் 96.14K டிக்கெட்கள் விற்கப்பட்டு சாதனை படைத்தன. இந்தியாவில் ஒரு மணி நேரத்தில் புக் மை ஷோ தளத்தில் அதிக டிக்கெட் விற்பனையானது ‘எம்புரான்’ படத்துக்குதான். இதற்கு முன்பு ’லியோ’ படத்துக்கு 82K டிக்கெட்கள் விற்பனையானது சாதனையாக இருந்தது. தற்போது அது முறியடிக்கப்பட்டுள்ளது.