வசூலில் முதல் இடம் பிடித்த ‘எம்புரான்’ : இதுவரை எத்தனை கோடி வசூல் தெரியுமா?

நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘எம்புரான்’ திரைப்படமானது ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படத்தின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது.

பிருத்விராஜ்-மோகன்லால் கூட்டணியில் உருவான எம்புரான் திரைப்படம் மார்ச் 27 அன்று வெளியானது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகளால் சர்ச்சையில் சிக்கியது. இதையடுத்து சர்ச்சைக்குரிய காட்சிகள் படத்தில் இருந்து நீக்கப்பட்டது. பல்வேறு சர்ச்சைகள், கடுமையான விமர்சனங்கள் எழுந்தாலும் படத்தின் வசூலில் பாதிப்பு ஏற்படவில்லை.

இந்நிலையில் ‘எம்புரான்’ திரைப்படம் உலக அளவில் 250 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கு முன் அதிக வசூல் செய்த ’மஞ்சும்மல் பாய்ஸ்’ படத்தின் சாதனையை ’எம்புரான்’ முறியடித்துள்ளது.