மேற்காசியாவில் தீவிரமான போர் பதற்றம் நிலவி வருவதால், ஐக்கிய அரபு அமீரகத்தின் வான்வழி எல்லைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக இந்தியாவின் பல நகரங்களில் இருந்து துபாய்க்கு புறப்பட்ட Emirates விமானங்கள் மீண்டும் இந்தியாவிற்கே திருப்பி அனுப்பப்பட்டன.
டெல்லி, சென்னை, பெங்களூரு ஆகிய நகரங்களில் இருந்து நேற்று மாலை புறப்பட்ட விமானங்கள், ஏர் டிராஃபிக் கட்டுப்பாட்டு அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி துபாயில் தரையிறங்க முடியாமல் இந்தியாவிற்கே திரும்பின.
பயணிகள் தற்போது ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், சூழ்நிலை சரியானவுடன் விமான சேவைகள் மறுசீரமைக்கப்படும் என்றும் எமிரேட்ஸ் நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளை போர் பதற்றம் காரணமாக வளைகுடா நாடுகளில் இதுவரை சுமார் 13,000 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
