எலான் மஸ்க் தலைமையிலான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்லிங் செயற்கைக்கோள் இணைய சேவைக்கு இந்தியாவில் அனுமதி கிடைத்துள்ளது. ஸ்டார்லிங் இந்தியாவில் முதன்மையாக கிராமப்புற மற்றும் தொலைதூர பகுதிகளில் உயர் வேக இணையம் வழங்க திட்டமிட்டு செயல்படுகிறது.
இந்தியாவில் ஸ்டார்லிங் சேவை பெற வாடிக்கையாளர்கள் மாதம் சுமார் ரூ.3,000–ரூ.4,200 வரை கட்டணம் செலுத்த நேரிடும் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன. சேவை பயன்பாட்டுக்கு தேவையான உபகரண (ஹார்ட்வேர்) கட்டணம் சுமார் ரூ.30,000 முதல் ரூ.35,000 வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது இந்தியாவில் ஜியோ, ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் சில தனது ஒப்பந்தங்களை ஸ்டார்லிங்குடன் சேர்க்க முயற்சி செய்கின்றன. மத்திய அரசின் அனுமதி வழங்கப்பட்டாலும், இந்தியா முழுக்க சேவை தொடங்குவதற்கு இன்னும் சில கட்டாய நடைமுறைகள் பூர்த்தி செய்ய வேண்டும். அதற்கு 2025 இறுதி அல்லது 2026 தொடக்கமே இலக்கு என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.