Advertisement
அமெரிக்கா சென்றுள்ள தென் கொரியா அதிபர் யூன் சுக் இயோல் – டெஸ்வா நிறுவனர் எலன் மஸ்கை சந்தித்துள்ளார்.
6 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள தென்கொரியா அதிபர் அமெரிக்கா தொழிலதிபர்களை சந்தித்து முதலீடு செய்ய அழைப்பு விடுத்து வருகிறார். அதன்படி எலன் மஸ்கை சந்தித்து பேசியுள்ளார். அப்போது, தென்கொரியாவில் பேட்டரி தொழிற்சாலைகள் அமைத்தால் வரிசலுகைகள் உள்ளிட்ட உதவிகளை வழங்க தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார். இதற்காக எலன்மாஸ் விரைவில் ஆசிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.