உலக பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்த எலான் மஸ்க்…

182
Advertisement

உலகின் முதல் பணக்காரர் என்ற அந்தஸ்த்தை டெஸ்லா இன்க் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் மீண்டும் பெற்று இருக்கிறார்.

மே 31 ஆம் தேதி பெர்னார்ட் LVMH பங்குகள் 2.6 சதவீதம் வரை சரிந்ததை தொடர்ந்து, பணக்காரர்கள் பட்டியலில் மாற்றம் ஏற்படுகிறது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் எலான் மஸ்க்கினை கடந்து உலகின் முன்னணி பணக்காரர் என்ற அந்தஸ்தை பெர்னார்ட் பெற்றார்.ஏப்ரல் மாதம் துவங்கியதில் இருந்தே, LVMH பங்குகள் பத்து சதவீதம் வரை சரிவடைந்து வருகின்றன.

ஒரு கட்டத்தில் பெர்னார்ட் சொத்து மதிப்பு ஒரே நாளில் 11 பில்லியன் டாலர்கள் வரை சரிந்தது.மறுபக்கம் எலான் மாஸ்க் இந்த ஆண்டு 55.3 பில்லியன் டாலர்களை ஈட்டியிருக்கிறார்.

இதில், பெரும்பாலான வருவாய் டெஸ்லா நிறுவனத்தில் இருந்து கிடைத்தவை ஆகும்.மேலும், எலான் மஸ்கின் மொத்த சொத்து மதிப்பு 192.3 பில்லியன் டாலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, பெர்னார்ட்டின் சொத்து மதிப்பு 186.6 பில்லியன் டாலர் என்பது குறிப்பிடத்தக்கது.