அமெரிக்க அதிபர் டிரம்ப் பதவியேற்றதை தொடர்ந்து அரசு நிர்வாக செலவுகளை குறைப்பதற்காக Dodge எனும் புதிய துறை உருவாக்கப்பட்டது. அதன் செயல் தலைவராக எலான் மஸ்க் பொறுப்பு வகித்து வந்தார். தொடர்ந்து நிர்வாகத்தில் மாற்றங்கள் கொண்டு வரும் விதமாக பல அதிரடி முடிவுகளை மேற்கொண்டார்.
இந்தநிலையில் டிரம்புடன் இணைந்து, எலான் மஸ்க் செயல்படுவதால் அவருடைய டெஸ்லா நிறுவனம் உள்ளிட்டவற்றின் பங்குகள் மதிப்பு குறைய தொடங்கின. இந்தநிலையில் Dodge துறைக்கு நேரம் ஒதுக்குவதை குறைத்து கொள்ள இருப்பதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். அடுத்த மாதத்துக்குள் டிரம்ப் நிர்வாகத்தில் இருந்து முழுவதுமாக வெளியேறிவிடுவேன் என சூசகமாக தெரிவித்துள்ளார்.