உத்தர பிரதேச மாநிலம் மிர்சாபூரை சேர்ந்தவர் நரேந்திர குமார் சுக்லா. இவர் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இருந்து ஜெயமதி என்ற பெண் யானையை ரூ.40 லட்சம் கொடுத்து வாங்கியுள்ளார்.
இந்நிலையில் அந்த யானை காணாமல் போயுள்ளது. இது குறித்து நரேந்திர குமார் சுக்லா போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் யானையை தேடி வந்தனர். அப்போது பீகாரில் ஒரு கும்பல் பெண் யானை ஒன்றை ரூ.27 லட்சத்துக்கு விற்றதாக ஜார்க்கண்ட் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் யானையை மீட்டனர். அதே நேரம் யானையை திருடி விற்ற கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.