கழன்று ஓடும்  டயருக்கு மத்தியில் டயருடன் விளையாடும் யானை

368
Advertisement

சமூக வலைதளங்களில் எப்போதும் விலங்குகள் தொடர்பான வீடியோ வைரலாவது வழக்கம். அந்தவகையில் தற்போது ஒரு வீடியோ வேகமாக வைரலாகி வருகிறது. அதில் மனிதர்களை போல் யானை ஒன்று செய்யும் செயல் பலரையும் கவர்ந்து வருகிறது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் உடுமலை சாலையில் பள்ளி குழந்தைகளை ஏற்றிச் சென்ற வாகனத்தின் டயர் கழன்று சாலையில் ஓடியது 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.சில தினங்கள் முன்பு கூட பல்லடம் அருகே சாலையில் சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்தின் முன்புற சக்கரம் திடீரென கழன்று ஓடிய நிலையில், ஓட்டுநர் சாமர்த்தியமாக செயல்பட்டு பேருந்தை நிறுத்தியதால் 47 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி இருந்தனர். ஆனால் தற்போது யானை ஒன்று டையர் ஒன்றை வைத்து ஒட்டி விளையாடி கொண்டிருக்கிறது .

இது தொடர்பாக இந்திய வனத்துறை அதிகாரி ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை   பதிவிட்டு “இதை நம்முடைய குழந்தை பருவத்துடன் நிச்சயம் ஒப்பிட்டு பார்க்கலாம்” எனக் கூறியுள்ளார். இந்த வீடியோ பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோவை 24ஆயிரத்திற்கும்  மேற்பட்டவர்கள் பார்த்துள்ளனர். மேலும் பலரும் இந்த வீடியோ தொடர்பாக தங்களுடைய கருத்துகளை ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.