ராணிப்பேட்டையில் சாலையின் நடுவே உள்ள மின் கம்பத்தை இடமாற்றம் செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் சோம சமுத்திரம் ஊராட்சியில் உள்ள திருவள்ளுவர் தெரு பகுதியில், சாலையின் நடுவே இரண்டு மின்கம்பங்கள் உள்ளன. இதனால் ஆம்புலன்ஸ் போன்ற பெரிய வாகனங்கள், சாலையில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இரண்டு மின்கம்பங்களையும் மாற்றி அமைக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.